தேனி அருகே கோடங்கிபட்டியில் எம்பி தலைமையில் சிலம்பம் போட்டி தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள கோடாங்கி பட்டியில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் போடி கிழக்கு ஒன்றியம் எஸ்.ஜி.கே. சிலம்ப கலைக்கூடம் சார்பில் உலக சாதனை சிலம்பம் போட்டி தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்கத்தமிழ் செல்வன் எம்பி தலைமையில் நடைபெற்றது
இந்த போட்டியில் தேனி திண்டுக்கல் மதுரை திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு சிலம்பப் பயிற்சி மையங்களை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட சிலம்பம் விளையாட்டு வீராங்கனை மாணவ மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர் போட்டியில் மூன்று வயது முதல் 21 வயது வரை உள்ள சிறுவர் சிறுமிகள் இளைஞர்கள் இந்த சிலம்பம் சாதனை போட்டியில் பங்கேற்றனர்
இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தங்க தமிழ்ச்செல்வன் எம்பி சிறப்பு கேடயங்கள் மற்றும் பரிசுத்தொகை வழங்கி ஊக்கப்படுத்தினார்.
நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் எஸ் பி ஐயப்பன் பூதிப்புரம் பேரூர் திமுக செயலாளர் பேரூராட்சி மன்ற தலைவர் கவியரசு பால்பாண்டியன் உள்ளிட்ட திமுக ஒன்றிய பேரூர் ஊரக மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்