தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் 6 பெரியார் புரா கிராமங்களில் மக்களுடனும், பள்ளி மாணவர்களுடனும் வளங்குன்றா வளர்ச்சி பொங்கல்வைத்து, விளையாட்டு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தி கொண்டாடினர்.
தேர்வு செய்யப்பட்ட கிராமங்களான செங்கிப்பட்டி, ஆச்சாம்பட்டி, பாலையப்பட்டி, செல்லப்பன்பேட்டை, புதுக்குடி, இராயமுண்டான்பட்டி ஆகிய கிராமங்களிலும் மற்றும் பல்கலைக்கழக வளாகத்திலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு கிராமத்திலும் சிறந்த விவசாயி ஒருவரை தேர்வு செய்து அவர்களுக்கு பாரம்பரிய விதை நெல் வழங்கி பாராட்டினார்கள். மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மொத்தமாக 2000 க்கும் மேற்பட்டோர் இவ்விழாக்களில் பங்கேற்று கொண்டாடி மகிழ்ந்தனர். பல்கலைக்கழகத்தின் ஆறு குழுக்களாக தனித் தனியே கிராமங்களை தேர்வு செய்து இவ்விழானது சிறப்பாக நடத்தினர். பல்கலைக்கழக மாணவர்களின் சிலம்பாட்டமும், பறையாட்டமும் அனைவரையும் கவர்ந்தது. தஞ்சாவூர் மாவட்ட சுற்றுச்சூழல் துறையின் முதன்மைப் பொறியாளர் திருமதி வேதா மாதவன் செங்கிப்பட்டி நிகழ்வில் பங்கேற்று வாழ்த்தினர்.
மேலும் இவ்விழாவில் பல்கலைக்கழக பதிவாளர் பி.கே.ஸ்ரீவித்யா அனைத்து துறையைச் சார்ந்த முதன்மையர்கள், இயக்குநர்கள், பேரசிரியர்கள் ஆகியோர் ஐந்து குழுக்களாக பிரிந்து பசுமை பொங்கல் விழாவினை கொண்டாடினார்கள்.