தே.பண்டரிநாதன் (எ) அண்ணாதுரை டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு துணை ஆசிரியர்

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு மணவெளி தொகுதியில் உள்ள 15000 குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு வீடு வீடாக சென்று வழங்கும் நிகழ்ச்சியை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவை தலைவருமான செல்வம் தொடங்கி வைத்தார்.
தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு மணவெளி தொகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தனது சொந்த செலவில் பச்சரிசி வெல்லம் பச்சை பயிறு நெய் முந்திரி திராட்சை மஞ்சள் குங்குமம் அடங்கிய பொங்கல் தொகுப்பினை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவருமான செல்வம் ஆர் அவர்கள் வீடு வீடாக சென்று வழங்கும் நிகழ்ச்சியை இன்று தவளக்குப்பம் பகுதியில் இருந்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில விவசாய அணி தலைவர் ராமு பொதுச் செயலாளர் சக்திபாலன் மாவட்டத் தலைவர் சுகுமாரன் தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன் கிருஷ்ணமூர்த்தி ரெட்டியார் சக்திவேல் கலைவாணன் காமராஜ் மாவட்ட துணைத் தலைவர் மணிகண்டன் ராம்குமார் மணி பன்னீர் தங்கதுரை ராமச்சந்திரன் முரளி சசி செந்தில் அருள் ஜீவா மதன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.