தே.பண்டரிநாதன் (எ) அண்ணாதுரை டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு துணை ஆசிரியர்

புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகர் ஷைன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பாராமெடிக்கல் கல்வி நிறுவனத்தின் சார்பில் பொங்கல் விழா மேளதாளத்துடன் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி நேதாஜி நகர் இரண்டில் ஷைன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பாராமெடிக்கல் கல்வி நிறுவனத்தின் சார்பில் பொங்கல் விழா வெகு விமர்சையாக மேளதாளத்துடன் கொண்டாடப்பட்டது.
இன்ஸ்டியூட் நிறுவனர் தமிழ்ச்செல்வி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ஊர் முக்கியஸ்தர்கள் பிரமுகர்கள் தீனன், சிவா, தீனதயாளன், குளம் கண்ணன், அலபாமா மேனன், எழலரசி மேனன், சார்லஸ் எலமர், செழியன், கணேசன், ஆதினார் கணேசன், முன்னாள் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் அன்பழகன், முன்னாள் காவல்துறை ஆய்வாளர் செல்வராஜ், கண்ணதாசன், செல்வசீலன், பிரியா, தீபா, செல்வி ரம்யா, ரோகினி மற்றும் புதுவை பாரதியார் கிராம வங்கி பொது மேலாளர் கணபதி உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.