தே.பண்டரிநாதன் (எ) அண்ணாதுரை டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு துணை ஆசிரியர்
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொங்கல் வாழ்த்து செய்தி-வாழ்த்து செய்தியில் கூறியதாவது
உலகத் தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் குறிப்பாக, புதுச்சேரி மக்களுக்கு எனது உள்ளம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழர்ப் பண்பாட்டின் அடையாளமான பொங்கல் திருவிழா – இயற்கையையும், உழவுத் தொழிலையும் போற்றும் விழாவாக, தமிழர்களின் மாண்புகளையும் கலைகளையும் பெருமைப்படுத்தும் விழாவாக கொண்டாடப்படுகிறது.
இந்த பொங்கல் திருநாளில் அனைவரது வாழ்விலும் அன்பும்-மகிழ்ச்சியும், இன்பமும்-இனிமையும், நலமும்-வளமும் பெருக வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்று தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்