தென்காசி மாவட்டம் தென்காசி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழர் திருநாள் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியை முன்னிட்டு வல்லம் திமுக மற்றும் இளைஞர் அணி சார்பில் நடத்தப்பட்ட கொடியேற்று விழா சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் வல்லம் திவான் ஒலி மற்றும் தென்காசி ஒன்றிய குழு தலைவர் ஷேக் அப்துல்லா ஆகியோர் தலைமை தாங்கினார் திமுகவின் மூத்த முன்னோடியும் முன்னாள் தலைமை கொரடாவும் முன்னாள் எம்எல்ஏ கா .மு கதிரவன் துணைவியார்ர் மலிகா கதிரவன் முன்னிலை வகிக்க கழக கொடியை தமிழ்நாடு சிறுபான்மை ஆணய துணைத் தலைவர் இறையன்பன் குத்தூஸ் கலந்து கொண்டு இரு வண்ணக் கொட்டியை ஏற்றி வைத்து சிறப்பு உரையாற்றினார் இந்நிகழ்ச்சியில் இளைஞர் அணி ஒன்றிய துணை அமைப்பாளர் வல்லம் ரபிக் உட்பட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் வாழ்த்துக்கள் பரிமாறிக் கொண்டனர்