பெரியகுளம் கைலாசநாதர் மலைக் கோயிலில் மார்கழி மாத பௌர்ணமி கிரிவலம்…

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள இந்து அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட கைலாசநாதர் மலைக்கோயிலில் 13/1/25 மார்கழி மாதம் பெளர்ணமி கிரிவலமும் சிறப்பான அன்னதானமும் நடைபெற்றது. பெரியநாயகி அம்பாளுக்கும்
கைலாசநாதர்க்கும்
மூலிகைகள், மற்றும் பால் , தயிர், சந்தனம் விபூதி கொண்டும் அபிஷேகம் செய்து அலங்காரம் செய்து தீபாராதனையும் உலக நன்மைக்காக கூட்டு வழிபாடும் நடைபெற்றது. ஆங்கில வருடத்தின் முதல் பெளர்ணமி என்பதால் அதிக பக்தர்கள் காலையில் இருந்தே கிரிவலம் வர தொடங்கினர். அதிக பக்தர்கள் தேனி மாவட்டம் மற்றும் பல மாவட்டத்தில் இருந்து வருகை தந்தனர். வருகை தந்த பக்தர்களுக்கு சிறப்பானஅன்னதானம் கட்டளைதாரர் வடுகபட்டி வெள்ளப் பூண்டு கமிஷன் மொத்த வியாபாரி தியாகராஜன் கல்பனா சார்பாக வழங்கபட்டது . இந்தமலைக்கோயிலில் பெளர்ணமியன்று கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணங்கள், அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறுகிறது என்பது நம்பிக்கை இந்த மலையில் சித்தர்கள் ரிஷிகள் , முனிவர்கள் சூட்சுமம் ஆக வந்து செல்கின்றனர் என்று சான்றோர்கள் கூறி வருகிறார்கள். இந்த புனிதமான இடத்தில் கைலாசநாதர் தியான நிலையில் இருப்பதால் மன அமைதிக்கும் சிறந்த புண்ணிய ஸ்தலமாக விளங்கி வருகிறது. இதனால் தரிசனம் செய்ய அதிகமாக பக்தர்கள் வருகின்றார்கள் ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் வி.ப ஜெயபிரதீப் செயலாளர் க.சிவகுமார் மற்றும் குழு உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *