போடி நகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சியில் அதன் தலைவர் ராஜா ராஜேஸ்வரி சங்கர் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது இந்த விழாவிற்கு நகராட்சி ஆணையாளர் எஸ் பார்கவி பொறியாளர் வி குணசேகரன் மேலாளர் முனிராஜ் சுகாதார அலுவலர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் விழாவில் சாதி மத வேறுபாடின்றி அனைத்து மதத்தினரும் சமுதாய பெரியோர்களும் கலந்து கொண்டு பொங்கல் விழாவை சிறப்பித்தனர். நிகழ்ச்சி நிகழ்ச்சியில் 33 வார்டு நகர் மன்ற உறுப்பினர்களும் நகராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்