கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் பாபநாசம் கிங்ஸ் லயன்ஸ் சங்கம் ஐம்பெரும் விழா….
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் பாபநாசம் கிங்ஸ் லயன்ஸ் சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா லயன்ஸ் சங்கத் தலைவர் ஜவ்கர் அலி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் துணை ஆளுநர்கள் மணிவண்ணன், இமயவரம்பன், மாவட்டத் தலைவர் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு முதியோர்களுக்கு பொங்கல் தொகுப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை ஆற்றினர்.
இந்நிகழ்ச்சியில் மண்டல வட்டார மாவட்ட லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பழனிவேல் ,சதீஷ்குமார் ராஜன், லயன்ஸ் சங்க சாசனத் தலைவர் முகமது இப்ராஹிம்,பஷீர் அகமது, ஹாஜா மைதீன், முத்துகிருஷ்ணன் மற்றும் முன்னாள், இன்னாள் சங்க தலைவர்கள், செயலாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.