தென் தமிழகத்தில் மேற்கு பார்த்த அமைந்துள்ள சிவா ஆலயங்களில் பிரசித்தி பெற்ற திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டியில் அருள்மிகு ஶ்ரீ கைலாசநாதர் சமேத செண்பகவல்லி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் பால்,இளநீர், சந்தனம், ஜவ்வாது, மஞ்சள்,தேன், திருமஞ்சனம், வில்வம்,போன்ற 21 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் தொடர்ந்து வில்வம், மல்லிகை, ரோஜா, முல்லை, அரளி, செம்பருத்தி, செவ்வரளி, தாமரை, கனகாம்பரம், சாமந்திப்பூ, செவ்வந்திப்பூ,தாழம்பூ, வாடாமல்லி,
ஜாதிமல்லி, மலர்கள் கொண்ட சிறப்பு அலங்காரம், அபிஷேகம், பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது.
மூலவர் கைலாசநாதர் செண்பகவல்லி தாயாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது முன்னதாக சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகத்துடன் கோ பூஜை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். பின்னர் நடராஜர் சமேத சிவகாமி தேரில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *