தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி மாணவ-மாணவிகள் பொங்கல் விழா ஆட்டம், பாட்டம், என சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாட்டம்!…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்:தை மாதம் முதல் நாள் தை திருநாளாகவும், தமிழர் திருநாளாகவும், பொங்கல் பண்டிகையாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கான கொண்டாட்டங்கள் தமிழகம் முழுவதும் களைகட்டத் தொடங்கி உள்ள நிலையில் பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தாராபுரம் புறபழிச்சாலை பகுதியில் உள்ளது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இந்த கல்லூரியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தை பொங்கல் திருவிழாவை யொட்டி பாரம்பரிய பேட்டி சேலை அணிந்து வந்து.சமத்துவ பொங்கல் வைத்து மாணவ-மாணவிகள் ட்ரம் செட் இசைக்கு ஏற்றவாறு நடன நாட்டியங்கள் ஆடி பொங்கல் விழாவை கொண்டாடினர்.
மேலும் உரியடித்தல் மியூசிக் சேர் கயிறு இழுத்தல் உள்ளிட்ட பழமையான விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர் இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.