வலங்கைமானில் சிவன் ஆலயங்களில் ஆருத்ரா தரிசனம் விழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் ஸ்ரீ உண்ணாமலையம்மன் சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலயம், ஸ்ரீ தையல்நாயகி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரர் ஆலயம்,ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயம், விருப்பாச்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் ஆகியவற்றில் ஆருத்ரா தரிசனம் விழாவை முன்னிட்டு முதல் நாள் இரவு 10 மணிக்கு ஸ்ரீநடராஜர் மகா அபிஷேக விழாவும், மறுநாள் காலை ஏழு மணிக்கு ஸ்ரீநடராஜ பெருமாள் ஆருத்ரா தரிசனம் திருவீதி உலா காட்சியும், மாலை 6 மணிக்கு பவுர்ணமி அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை அந்தந்த ஆலய நிர்வாகமும், பக்தர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.