தேவர்மலர் மீடியா பசும்பொன்னில் துவக்கம் கமுதி ஜன :14
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன்னில் தேவர் திருக்கோவிலில் ஆருத்ரா தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
கமுதி அருகே பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் திருக்கோவிலில் ஆருத்ரா பௌர்ணமி தினத்தை முன்னிட்டு தேவர் திருவுருவ சிலைக்கு பால், பன்னீர், இளநீர், திருநீர், சந்தனம், பஞ்சாமிர்தம், புஷ்பம்,மஞ்சள் ஆகிய 21 வகையான அபிஷேகம், சிறப்பு பூஜையை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில் பட்டாச்சாரியர்கள் அனைத்து பூசைகள் செய்தார், தேவர் மலர் மீடியா என்ற செய்தி நிறுவனம் பசும்பொனில் துவக்கப்பட்டது. நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஆசிரியர் மதுரை வீரன், இணை ஆசிரியர் பசும்பொன் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள், மார்கழி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு தரிசனம் செய்ய வருகைதந்த அனைத்து பக்தர்களுக்கும் தேவர்மலர் அறக்கட்டளையின் சார்பில் அன்னதானம் நடைபெற்றது நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேவர் மலர் அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.