தாராபுரத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் அமைச்சர் கயல்விழி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வேட்டி சேலை ஆகியவற்றை வழங்கி பொதுமக்களுடன் சமத்துவ பொங்கல் வைத்து கும்மி அடித்து நாட்டுப்புற பாடல் பாடினார்!.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திமுக தெற்கு மாவட்டம் தாராபுரம் நகரம் சார்பில் அண்ணா சிலை அருகே நடந்த சமத்துவ பொங்கல் விழாவில், சிறப்பு விருந்தினராக மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புதன்கிழமை இன்று மாலை நடந்த விழாவில் இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர் தலைமை தாங்கினார்.

நகர் மன்ற உறுப்பினரும் திமுக தாராபுரம் நகர துணை செயலாளருமான கமலக்கண்ணன் முன்னிலை வகித்து. பொதுமக்கள் 500- பேருக்கு வேட்டி,சட்டை, சேலை ஆகியவற்றை வழங்கினார் மேலும் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள 50- குழந்தைகளுக்கு மாதம் 12,500 செலுத்தும் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் அட்டையினை வழங்கி மேலும் மாதம் தோறும் தனது சொந்த செலவில் வழங்குவதாக உறுதியளித்து சேமிப்பு திட்ட அட்டைகளை பெற்றோர்களிடம் வழங்கினார்.
18-வது வார்டு ஜான் பிலோமினா சமத்துவ பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் சமத்துவ பொங்கல் வைத்து பொதுமக்களுடன் வட்டமிட்டு கும்மி அடித்து நாட்டுப்புற பாடல் பாடி விழாவை சிறப்பித்தனர்.

இதில் கவுன்சிலர் யூசுப் மாவட்ட பிரதிநிதி ஐயப்பன். உள்ளிட்ட திமுக முன்னாள் இந்நாள் நிர்வாகிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *