கடலூர் மாவட்ட கட்டிட தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் 11 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை தைப்பொங்கல் திருநாளில் பரிசுப் பொருட்கள் தொகுப்பு வழங்குவது வழக்கமாகக் கொண்டு தைப்பொங்கல் திருநாளில் கடலூரை அடுத்த குண்டு சாலை ரோடு இந்திரா நகர் கிளையில் பொருளாளர்
கோபாலகிருஷ்ணன் தலைமையில்கிளைச் செயலாளர்
ராஜா வரவேற்புடன். தொமுச மாவட்ட செயலாளர்
வி எம் ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு
கட்டிட தொழிலாளர்களை வாழ்த்தி பேசி தொழிலாளர்களின் ஒற்றுமை ஓங்க வேண்டும் என்ற கருத்துக்களை எடுத்துரைத்து 60-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசுகளான பித்தளை தவளை, காரம், ஸ்வீட் பாக்ஸ்உள்ளடக்கிய தொகுப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் பொறுப்பாளர்கள் கிளைத் தலைவர் முத்தழகன், கிளை துணைத் தலைவர் மாயகிருஷ்ணன்,கிளை துணை செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா நிறைவில் மகளிர் அணி தலைவி சங்கீதா
நன்றி கூறினார்.