நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே படுகை அணை அமைத்து, இராஜ வாய்க்கால் மூலம் பாசன வசதியை ஏற்படுத்தித் தந்த மன்னர் அல்லாள இளைய நாயகரின் ஆட்சி சிறப்பை போற்றும் வகையில், பரமத்தியில், அவரது ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு, சிதலைமடைந்துள்ள மண் கோட்டையை, மத்திய அரசு தொல்லியல் துறை மூலம் சீரமைத்து மாபெரும் விழா எடுக்க பாஜக நடவடிக்கை எடுக்கும் என்றும், அம்மன்னரின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடுவதற்கு காரணமாக இருந்த அதிமுகவிற்கும், முதன்முறையாக அரசு விழாவை கொண்டாடும் திமுக அரசிற்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாகவும் பாஜக மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் K.P. இராமலிங்கம் தெரிவித்துள்ளார்நாமக்கல் மன்னர் அல்லாள இளைய நாயகரின் குவி மாடத்தில், அம்மன்னரின் பிறந்தநாள் விழா, தைத் திங்கள் 1-ம் நாள், அரசு விழாவாக இந்த ஆண்டு முதல் அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள், கட்சியினர் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன்ஒருபகுதியாக, பாஜக சார்பில், ஜேடர்பாளையம் படுகை அணை அருகே, மன்னரின் திருஉருவச்சிலையுள்ள குவி மாடத்தில், அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சேலம் பெருங்கோட்டப் பொறுப்பாளர் டாக்டர் கே பி இராமலிங்கம்,, மன்னர் அல்லாள இளைய நாயகரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பாஜகவினர் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
அப்போது மன்னர் அல்லாள இளைய நாயகரின் பரம்பரையை சேர்ந்த பட்டக்காரர் சோமசுந்தரம், மன்னரின் பரம்பரையினர் அளித்த கோரிக்கை மனுவையும் டாக்டர். K.P. இராமலிங்கம் பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட பாஜக தலைவர்கள் N.P. சத்தியமூர்த்தி, M. இராஜேஷ்குமார், கபிலர்மலை வடக்கு ஒன்றிய தலைவர் பூபதி, கரூர் மாவட்டத் தலைவர் செந்தில்நாதன், சசி தேவி, அருண், வரதராஜ், பழனியப்பன், சுபாஷ், வடிவேல், பத்மராஜன், நாமக்கல் நகரத் தலைவர் தினேஷ், கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் செல்வராஜ், பாஜக நிர்வாகிகள் K.P. சரவணன், வடிவேல், பத்மநாபன், உள்பட பலரும் கலந்துகொண்டனர்.
பேட்டி:
Dr. K.P. இராமலிங்கம்,
மாநிலத் துணைத் தலைவர்,
பாரதிய ஜனதா கட்சி.