தென்காசி மாவட்டத்தில் காவலர் சையத் அலி காலாமானர். அவரது
உடலுக்கு தென்காசி டிஎஸ்பி தமிழினியன் தலைமையில்
அரசு மரியாதையுடன் – 30 குண்டுகள் முழங்க நல்ல அடக்கம் நடைப் பெற்றது.
முன்னதாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் நேரடியாக வீட்டுக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்வில் ஏ டி எஸ் பி வேணுகோபால், அச்சன்புதூர் இன்ஸ்பெக்டர் கவிதா, சப் இன்ஸ்பெக்டர் சின்னத்துரை, மற்றும் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர் மரியாதை செலுத்தினார்கள்.