போடிநாயக்கனூர் நகராட்சி பகுதிகளில் பட்டாசு வெடிக்க தடை மீறினால் 5000 அபராதம் நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி மாவட்டத்தின் சிறப்பு வாய்ந்த நகராட்சியாகும் இந்த நகராட்சியின் நகராட்சி பகுதிகளில் திருமணம் காதுகுத்து வசந்த விழா துக்க சம்பவம் உள்ளிட்ட அனைத்து விசேஷங்களுக்கும் பட்டாசு வெடிப்பது வழக்கமாகி வருகிறது

அதிக ஒலி எழுப்பும் பட்டாசு வெடித்தால் முதியோர்கள் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் பட்டாசு வெடித்த பின் ரோட்டில் சேரும் பேப்பர் கழிவுகளால் ரோடே குப்பைமயமாக மாறி வருகிறது

மேலும் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கும் நல்ல எண்ணத்தில் நகராட்சி பகுதிகளில் நீதிமன்றம் கோயில் குடிசை பகுதி உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் பட்டாசு வெடிக்க முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது

பேப்பர் கலாக்காய் இடங்கள் அதிக ஒலி அதிக புகை வெளியிடும் பட்டாசு களுக்கு நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது நிகழ்ச்சிகள் நடக்கும் மண்டபம் வீடுகள் முன்பு பட்டாசு வெடிக்க நகராட்சியிடம் முன் அனுமதி பெற்று குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் இந்த நிபந்தனைகளை மீறும் அவர்களுக்கு ரூபாய் 5000 நகராட்சி மூலம் அபராதம் விதிக்கப்பட்டும் தொழில் நிறுவனங்களாக இருப்பின் அதன் உரிமம் ரத்து செய்யப்படும் நிகழ்ச்சிகள் நடைபெறுவது மண்டபமாக இருந்தால் மண்டப உரிமையாளரிடமும் வீட்டில் நடைபெறுவதாக இருந்தால் விசேஷம் நடத்துபவரிடமும் சேவை கட்டணமாக நகராட்சி மூலம் ரூபாய் ஆயிரம் வசூலிக்கப்படும் என்று நகராட்சி நகர மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *