நல்லூர் பெருமாள் கோவிலில் துலாபாரம் வைபவம்…!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த நல்லூர் ஸ்ரீ சுந்தரவரதராஜ பெருமாள் கோவிலில் இன்று பக்தர்களின் நேர்த்தியான துலாபாரம் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த வைபவத்தில் கோவில் அர்ச்சகர் ராஜன் ஸ்வாமிகள் மூல மூர்த்திகளுக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் பூஜை முறைகளை மேற்கொண்டார். மேலும் மகா தீபாராதனையும் நடந்தேறியது. பிறகு பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.