கரூர் மாவட்டம் சின்ன தாராபுரம் கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் பரிசளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக கரூர் மாவட்ட செயலாளர் பிஎம்கே பாஸ்கரன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.
தொடர்ந்து நடைபெற்ற வன்னியர் குடும்ப விழாவில் மருத்துவர் அய்யா மருத்துவர் சின்ன அய்யா அன்புமணி ராமதாஸ் இட ஒதுக்கீடு மற்றும் மது ஒழிப்பின் அவசியம் குறித்து பேசினார்.
கட்சிகளை கடந்து ஒட்டுமொத்த வன்னியர் சமுதாய மக்களும் மருத்துவர் அய்யா ராமதாஸ் காட்டிய வழியில் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஒன்றிணைந்து போராடினால் தான் வன்னியர் இட ஒதுக்கீடும் பூரண மதுவிலக்கும் சாத்தியம் என்று எடுத்து கூறினார்.