கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்டம் அரசு காலணி பகுதியில் கரூர் மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு துணை முதலமைச்சர், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி இன்று அரசு காலனி அருகே உள்ள மாபெரும் குதிரை பந்தயத்தை, தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.
முதல் போட்டியான 26.புதிய குதிரைகள் அரசு காலணி முதல் எல்லமேடு வரை சென்று மீண்டும் அரசு காலனி வந்தடைந்தது.
2வது போட்டி18.சிறியகுதிரை வகை அரசு காலனி முதல் குப்பிச்சிபாளையம். வரை சென்ற மீண்டும் அரசு காலனி பகுதி வந்துஅடைந்தது.
3வது போட்டி பெரிய குதிரை வகையானது அரசு காலனி முதல் வாங்கல் வரை. 10 Km சென்றடைந்து புதிய குதிரை முதல் பரிசு
கரூர் பாரத் பஸ் கம்பெனி இரண்டாம் பரிசு தாஜ் ஆம்புலன்ஸ் பவானி,மூன்றாம் பரிசு சிவா மேட்டுப்பாளையம் சிறிய குதிரை
முதல் பரிசு விஜயா உறையூர் திருச்சி,இரண்டாம் பரிசு சக்தி, கரூர் போலீஸ் மூன்றாம் பரிசு தினேஷ் கோவை, பெரிய குதிரை
முதல் பரிசு மற்றும் இரண்டாம் பரிசு நவலடியான் குரூப்ஸ் கரூர்
மூன்றாம் பரிசு பர்வீன் லால்குடி வெற்றி பெற்ற
முதல் பரிசு, இரண்டாம் பரிசு,மூன்றாம் பரிசு குதிரை உரிமையாளர்களுக்கு குதிரை ரேக்ளா பந்தயத்தில் சாரதிகள்க்கு சால்வை அணிவித்து வெற்றி பெற்றவர்களுக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோப்பைகள் மற்றும் பரிசுத்தொகையை வழங்கினார்.
, இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் அரவக்குறிச்சி இளங்கோ, கிருஷ்ணராயபுரம் சிவகாமசுந்தரி,மாவட்ட துணை செயலாளர் எம் எஸ் கருணாநிதி , கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமாரசாமி,,ஒன்றிய செயலாளர்கள் கோயம்பள்ளி பாஸ்கர், வேலுச்சாமி மற்றும் மாவட்ட ஒன்றிய நகர மாமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் பலர் கலந்து கொண்டனர்.