விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி எம்ஜிஆர் நகர் 1 பகுதியில் கந்தசாமி( 70) சுந்தராம்பாள்( 65) என்ற தம்பதியினர் குடியிருந்து வருகின்றனர்.
இந்நிலையில் நள்ளிரவு ஒரு மணி அளவில் மழை பெய்து கொண்டிருந்தபோது திடீரென்று ஓட்டு வீடு இடிந்து கீழே விழுந்து இருவரையும் அமுக்கியது. இதில் சுந்தரம்மாள் தலையில் படுகாயத்துடனும், கந்தசாமி கால் முறிவு ஏற்பட்ட நிலையிலும் உயிர் பிழைத்தனர். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்து இருவரையும் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் அந்த வீடை ஒட்டிய கழிவுநீர் வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டு நீர் தேங்கி இருப்பதால் வீட்டின் சுவர் நீரில் ஊறி, கரைந்தும் மழை நீரும் சேர்ந்துகொண்டதால், இந்த சம்பவம் நடந்துள்ளது, ஆகவே, வாய்க்காலை உடனடியாக சுத்தம் செய்யுமாறு அப்பகுதி மக்கள் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் சுப்பிரமணியன், மற்றும் அப்பகுதி கிளைச் செயலாளர் மேரி உள்பட பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.