எஸ்டிபிஐ கட்சி சார்பில் வக்பு உரிமை மீட்பு குறித்து பேரணி – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு…
தமிழ்நாடு அரசு மற்றும் வக்பு வாரியம் செய்கின்ற அநீதி தான் பெரிய அநீதி – எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் பேச்சு..
SDPI சார்பில் இன்று கோவை உக்கடம் லாரி பேட்டை பகுதியில் வக்பு உரிமை மீட்பு மாநாடு நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டார் மேலும் பல்வேறு மாவட்ட தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக வக்பு உரிமை மீட்பு குறித்து பேரணி நடைபெற்றது. கரும்புக்கடை பகுதியில் இருந்து துவங்கிய இந்த பேரணியானது உக்கடம் லாரி பேட்டை மாநாடு திடலில் முடிவடைந்தது. இதில் குழந்தைகள் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.