எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே மாதிரவேளூர் ஸ்ரீ சுந்தர நாயகி சமேத ஸ்ரீ மாதலீஸ்வரர் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மாதிர வேளூர் கிராமத்தில் சீதையை மீட்கச் சென்ற இராமபிரானின் தேரோட்டியான மாதலி என்பவர் தனது தேர்ச் சக்கரத்தில் சிக்கிய சிவலிங்கத்தை, இங்கு ஸ்தாபித்து வழிபட்டதால் மாதலிபுரம் அல்லது மாதிரவேளூர் என்றும் பெயர் வந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

பிரசித்திப் பெற்ற மாதிரவேளூரில் அருள்புரியும் ஸ்ரீ சுந்தரநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ மாதலீஸ்வர ஸ்வாமி திருக்கோயில் காலத்தால் பழுதடைந்திருந்த நிலையில் பக்தர்கள் ஒன்றிணைந்து, திருப்பணியை முழுமையாக செய்து, பஞ்சவர்ணம் தீட்டி புதுப்பொலிவுடன் ஸ்ரீ மாதலீஸ்வரர் திருக்கோயில் மற்றும் கிராம தேவதைகளான ஸ்ரீ பூர்ணா புஷ்கலா சமேத ஸ்ரீ ஹரிஹர புத்திர ஐயனார் மற்றும் ஐயாங்குட்டி,ஸ்ரீ பிடாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக 6 கால யாக சாலை பூஜைகள் நிறைவடைந்து புனித நீர் அடங்கிய படங்கள் மேள,தாளங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டது. வேத விற்பனர்கள் மந்திரம் முழங்க கடங்கள் கோவிலை வலம் வந்து மூலவர் விமான கலசம், அனைத்து சன்னதி கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.