நெட்டப்பாக்கம் ச. முருகவேல் செய்தியாளர்

புதுச்சேரி புதுவை பண்ட சோழநல்லூரில் அகில இந்திய மகளிர் பேரவை சார்பில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி முகாம் துவக்க விழா நடந்தது. புதுடெல்லி உடான் திட்டத்தின் கீழ் நடைபெறும் இந்த இலவச தையல் பயிற்சி வகுப்பில் பெண்கள் பங்கு பெற்று ஆறு மாத கால அளவில் தையல் பயிற்சி வழங்கப்பட இருக்கிறது. பயிற்சியின் முடிவில் பங்கு பெற்ற அனைத்து மகளிர்க்கும் சான்றிதழ் வழங்கப்படும். புதுச்சேரி மகளிர் பேரவை தலைவர் ரெஹனா பேகம் விழாவினை துவக்கிவைத்து தலைமையுறை ஆற்றினார்.

மண்டல அமைப்பாளர் சொர்ணலதா சிறப்புரை ஆற்றினார். துணைத் தலைவர் பாத்திமா அலி இதன் பயன் பற்றி எடுத்துக் கூறினார். கலைமாமணி மார்கிரெட் நிக்கோலஸ் சிறப்புரையாற்றினார்.
புதுச்சேரி மகளிர் பேரவை உறுப்பினர் அஞ்சாலாட்சி தங்களுடைய சங்கத்தின் மூலம் இந்த அரிய பணியினை சிறப்பாக நடத்தும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார் துணை செயலாளர் முத்தமிழ் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார். பொருளாளர் விஜயலட்சுமி நன்றியுரையாற்றினார்.