R. கல்யாணமுருகன் செய்தியாளர் விருத்தாசலம்
டாக்டர் சுரேஷ் கல்வி குழும கல்லூரியில் விழிப்புணர்வு விழா.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த எருமனூரில் உள்ள டாக்டர் இ கே சுரேஷ் கல்வி குழுமம் மற்றும் சி எஸ் எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஈர நிலம் புதிய திசை அறக்கட்டளையும் இணைந்து இயற்கையை காக்கும் பல்லுயிர்கள் என்கின்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்விக்குழும நிறுவனர் சுரேஷ் தலைமை தாங்கினார். தாளாளர் இந்துமதி சுரேஷ் நிர்வாக அதிகாரி அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஈரநிலம் அமைப்பு நிறுவனர் தமிழரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓவியகண்காட்சி நடைபெற்றது. பேராசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.கல்லூரி துணை முதல்வர் ஜேசுதாஸ் நன்றி கூறினார்