R. கல்யாண முருகன் செய்தியாளர் விருத்தாசலம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில்தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய சிறையில் நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.
விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மாநில குழு உறுப்பினர் ரவீந்திரன் தலைமை தாங்கினார் பொருளாளர் விமலா முன்னிலை வகித்தார்.
தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மனை பட்டா மூன்று சக்கர சைக்கிள் அடையாள அட்டை வியாபார கடன் மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் கடன் போன்ற சலுகைகளை வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாற்றுத்திறனாளிகளை கைது செய்து காவல் துறையினர் தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்