மதுரை விமான நிலையத்தின் தரம் 3-ம் நிலையில் இருந்து 2-ம் நிலைக்கு உயர்ந்துள்ள நிலை யில், கூடுதல் விமான சேவை கிடைக்க வாய்ப்புள்ளதாக விமான அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுரை விமான நிலையத் தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட உள் நாட்டு நகரங்களுக்கும், துபாய், இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடு
களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது மதுரையில் இருந்து சென்னை வழியாக மலேசியாவுக்கு இரவு நேர விமான சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.
இதனால், மதுரை விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்தநிலையில், பயணிக ளின் வருகையை அடிப்படை யாக கொண்டு, மதுரை உள் ளிட்ட 6 விமான நிலையங்க ளின் தரம் உயர்த்தப் பட்டுள்ளதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, மதுரை, போபால், சூரத், உதய்ப்பூர், விஜயவாடா ஆகிய விமான நிலையங் கள் ஏ.பி.டி. மூன்றாம் தர நிலையிலிருந்து, 2-ம் தர நிலைக்கு உயர்த்தப்
பட்டுள்ளன.
இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், அகில இந்திய அளவில், விமான நிலையங் களில் உள்ள பயணிகளின் வருகை, புறப்பாடு மற்றும் அதிகரிக்கும் விமான சேவை, பயணிகளின் உடைமைகளை சோதனையிடும் மையம் உள்ளிட்ட வைகளை அடிப்படை யாக கொண்டு, விமான நிலையங் களில் உயர்த்தப் படுகிறது.
தரம் அதனடிப் படையில், தற்போது மதுரை விமான நிலை யம் 3-ம் தரநிலையில் இருந்து 2-ம் தர நிலைக்கு உயர்ந்துள்ளது. இதன் மூலம், மதுரை விமான நிலையத் தில் பயணிகளுக் கான வசதிகள் மேம்படுத்தப்படும். கூடுதலாக விமான சேவை கள், சோதனை மையம், பயணச் சீட்டு மையம், அலுவலர் களின் எண்ணிக்கை உள்ளிட்டவை அதிகரிக்கப்படும் என தெரிவித்தனர்.