பெரியகுளம் ஒன்றிய அஇஅதிமுக சார்பில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் 108-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம்;
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் எம்.ஜி.ஆர் திடலில் பெரியகுளம் ஒன்றியம் அஇஅதிமுக சார்பில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பெரியகுளம் (மே) ஒன்றிய கழக செயலாளர் அன்னபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. பெரியகுளம் (கி) ஒன்றிய செயலாளர் ராஜகுரு, பெரியகுளம் நகர் கழக செயலாளர் பழனியப்பன், தேனி (கி) மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் கழகத்தின் போர்வாள் அப்பாஸ் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேனி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முருக்கோடை_
இராமர், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினரும்,
முன்னாள் அமைச்சருமான கழக அமைப்புச் செயலாளர்
செல்வராஜ்,தலைமை கழக பேச்சாளர்நல்லாற்று நடராஜன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
இந்நிகழ்வில் முன்னாள் எம்.பி. பார்த்திபன், முன்னாள் எம்.எல்.ஏ. பெரியவீரன், கழக அம்மா பேரவை துணை செயலாளர் ஜெயக்குமார், மதுரை மண்டல தகவல் தொழில் நுட்ப பிரிவு துணை தலைவர் பாலச்சந்தர், மாவட்ட கழக இணைச்செயலாளர் முத்துலட்சுமி, மாவட்ட கழக பொருளாளர் வைகை பாண்டி, மாநில பொதுக்குழு உறுப்பினர் தவமணி கருப்பசாமி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் வழக்கறிஞர் தவமணி, தாமரைக்குளம் முன்னாள் துணை சேர்மன் இராம தண்டபாணி, மாவட்ட மகளிரணி துணை செயலாளர் பாப்பா இளமுருகன், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் பங்கஜம், மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் முத்துச்சாமி, மேற்கு ஒன்றிய துணை செயலாளர் செல்லப்பாண்டி, பேரூர் கழக செயலாளர்கள் பாலமுருகன் (வடுகபட்டி), மனோகரன் (தாமரைக்குளம்), தினேஷ் (கெங்குவார்பட்டி) பெரியகுளம் நகர் கழக துணை செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் கமலகண்ணன், எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கணேசன், அம்மா பேரவை செயலாளர் ஜெயசீலன் உள்பட கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.