திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி ஜங்ஷன் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டு சில ஆண்டுகள் தாலுகா அலுவலகமாக செயல்பட்டுக் கொண்டிருந்தது.
தற்போது தாலுக்கா அலுவலகம் மீண்டும் டவுன் பகுதிக்கு சென்றதனால் இந்த சமுதாய நலக்கூடம் மூடப்பட்டு பல ஆண்டுகளாக எந்தவித செயல்பாடும் இல்லாமல் தற்போது பாழடைந்த கிடைக்கிறது. இதனை அனைத்து சமுதாயத்தினரும் பயன்படுத்தும் வகையில் இந்த சமுதாய நலக்கூடத்தை அமைத்து தர தமிழக அரசு முன்வர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
கட்டிடம் மூடி கிடப்பதால் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்படுத்தித் தர வேண்டும் என்று இந்த பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வெகுவாக கோரிக்கை வைத்துள்ளனர்