எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே தருமகுளம் கடை வீதியில் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை வேளாண்துறை அதிகாரிகள் பார்வையிடாததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தர்ம குலம் கடைவீதியில் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிடாத வேளாண் துறை அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி தாலுகாவில் உள்ள திருவெண்காடு, ராதாநல்லூர், மணிகிராமம், மேலையூர், நெய்தவாசல் ,வானகிரி மேலபெரும்பள்ளம், கீழ பெரும்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பருவம் தவறிய பெய்த மழையினால் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் மழையில் சாய்ந்து சேதமடைந்தது. சேதமடைந்து பாதிக்கப்பட்ட பயிர்களை இதுவரை வேளாண் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யாததை கண்டித்து நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் தருமகுளம் கடைவீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மழையினால் சேதம் அடைந்த நெற்பயிர்களை கையில் ஏந்தி கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தருமகுளம் பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வணிகர்கள் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
மழையால் சேதம் அடைந்த விவசாய நிலங்களுக்கு நிவாரணத் தொகை மற்றும் காப்பீடு தொகை வழங்க கோரி கோஷங்களை எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பூம்புகார் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து வேளாண் துறை அதிகாரிகள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே சாலை மறியல் போராட்டத்தை கைவிடுவதாக விவசாயிகள் தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.