திருவையாறு அருகே திருமானூரில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா….

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே
திருமானூர் பிரில்லியன்ட் மழலையர் தொடக்கப்பள்ளியில் விஜிபி உலக தமிழ்ச் சங்கம் வழங்கிய 175 வது திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடைபெற்றது.

அமைச்சருக்கு கொம்பு மேளதாளம் ட்ரம் செட் போன்ற வாத்தியங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது
இவ்விழாவிற்கு விஜிபி உலக தமிழ் சங்க தலைவர் வி ஜி பி சந்தோஷம் தலைமை தாங்கினார். மாவட்ட தனியார் பள்ளி கல்வி அலுவலர் சங்கர், அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் அரங்க பாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, பள்ளி வளாகத்தில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்
தொடர்ந்து பள்ளி தாளாளர் கண்ணகி சிறப்பு அழைப்பாளர்களுக்கு சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசினை வழங்கி சிறப்பித்தார்
பள்ளி செயலர் முகில் வேந்தன் பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தினார்

மேலும் முனைவர் கலைவேந்தன் திருவள்ளுவர் அறம் கவின் மொழிகள் 100 திருக்குறள் வழியில் அறவழி தமிழ் பெயர்கள் என்ற கல் உட்பட ஆறு நூல்கள் வெளியிடப்பட்டன இதில் புலவர் கந்தசாமி டாக்டர் நரேந்திரன் திருக்குறள் ஞானமன்ற தலைவர் பன்னீர்செல்வம் இளங்கோவன் அருள் பிரகாஷம் உள்ளிட்ட ஊராட்சி நிர்வாகிகள் பங்கு பெற்றார்கள்
முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் சங்கீதா வரவேற்றார். நிறைவில் ஆசிரியர் ஜென்சி நன்றி கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *