கும்பகோணம் பேருந்து நிலையம் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம். புதிய பஸ் ஸ்டாண்ட் வியாபாரிகள் நல சங்கம் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் காந்தி பூங்காவில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கும்பகோணம் புதிய பஸ் ஸ்டாண்ட் வியாபாரிகள் நல சங்க தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார். மாநகராட்சி கூட்டத்தில் கடந்த 31ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட சிறப்பு தீர்மானம் 1. படி குடந்தை புதிய பஸ் ஸ்டாண்டை பைபாஸ் சாலைக்கு மாற்றும் தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி தமிழக அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது
இதில் சிவசேனா கட்சியின் மாநில துணைத்தலைவர் பூக்கடை எஸ் ஆனந்த், தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பாரதிமோகன் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமநாதன் பாரதிய ஜனதா கட்சியின் தஞ்சை மாவட்டத் தலைவர் தங்க கென்னடி ,தேமுதிக மாவட்ட செயலாளர் கோ சங்கர், அகில பாரத இந்து மகா சபா மாநில பொதுச் செயலாளர் செந்தில் முருகன், வணிகர் சங்கத் தலைவர் சேகர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் புதிய பஸ் ஸ்டாண்டை இடமாற்றம் செய்ய வேண்டாம் என்ற மாநகராட்சி சிறப்பு தீர்மானத்தை ரத்து செய்ய கோரியும் பேசினர் இதில் புதிய பஸ் ஸ்டாண்ட் வியாபாரிகள் நல சங்க நிர்வாகிகள் தமிழ்மாறன் கார்த்திகேயன் சதீஷ்குமார் மற்றும் பழக்கடை உரிமையாளர்கள் பூக்கடை வியாபாரிகள் ஆட்டோ கார் ஓட்டுநர்கள் திரளாக கலந்து கொண்டனர் . இறுதியில் வியாபாரிகள் சங்கத் துணைத் தலைவர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்..
கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்