செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.

வந்தவாசி போர் நடைபெற்று 266 ஆவது ஆண்டு நினைவு தின சிறப்பு உரையரங்கம் வந்தவாசி எக்ஸ்னோரா கிளை சார்பில் தெற்கு காவல் நிலையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் மாவட்ட தலைவர் பா.இந்திரராஜன் தலைமை தாங்கினார். எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர் சாதிக் வரவேற்றார். வட்டாட்சியர் ஆர்.பொன்னுசாமி, ஓய்வுபெற்ற மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் எஸ்.குமார், சப் இன்ஸ்பெக்டர் விநாயக மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக, செய்யாறு சப் கலெக்டர் பல்லவி வர்மா பங்கேற்று, காவல் நிலையத்தில் அமையப்பெற்ற
வந்தவாசி போர் நினைவு பீரங்கிக்கு மாலை அணிவித்து விழிப்புணர்வு உரை ஆற்றினார்.
மேலும் வந்தவாசி கோட்டையின் சிறப்புகள் பற்றி தொல்லியல்துறை காப்பாட்சியர் அ.ரஷித்கான் மற்றும் கவிஞர் அ.ஜ. இஷாக் ஆகியோர் உரையாற்றினர். மேலும் இந்த நிகழ்ச்சியில் எக்ஸ்னோரா கிளை துணைத் தலைவர் பா.சீனிவாசன், இயக்குநர்கள் வினோத் குமார், அறிவொளி வெங்கடேசன், அ.ஷாகுல் அமீது, மனோஜ் குமார், ஆரியன் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். ஆர்சிஎம் பள்ளி நாட்டுநலப் பணி திட்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. துணைத் தலைவர் கேப்டன் பிரபாகரன் நிகழ்வை தொகுத்து வழங்கினார். எக்ஸ்னோரா கிளை செயலாளர் ம.ரகுபாரதி நன்றி கூறினார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.