கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்டமும், கிருஷ்ணகிரி மாவட்ட நேரு யுவகேந்திராவும் இணைந்து நடத்திய தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி .
கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டமும் கிருஷ்ணகிரி மாவட்ட நேரு யுவகேந்திராவும் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட சாலை போக்குவரத்து காவல்துறையும் இணைந்து நடத்திய தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியை கிருஷ்ணகிரி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சி.முரளி அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார். நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவியர்களின் விழிப்புணர்வு பேரணியானது கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி ராயக்கோட்டை மேம்பாலம் வரை நடைபெற்றது.
இப்பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பொதுமக்களுக்கு சாலை விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் சாலைப் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த வாசகங்களை கையில் ஏந்திய வண்ணம் மற்றும் பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி பேரணியாக சென்றனர் கிருஷ்ணகிரி மாவட்ட நேரு யுவகேந்திரா அலுவலர் அப்துல் காதர் ஒருங்கிணைப்பா
ளராக செயல்பட்டார்,
இப்பேரணியில் அறிஞர் அண்ணா கல்லூரியின் முதல்வர் முனைவர் சு. தனபால் மற்றும் R. ஜோதி பிரகாஷ் ( SI, Traffic police ) மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட சிறப்பு காவல் ஆய்வாளர் கமலநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.
நேரு யுவகேந்திராவின் அலுவலர்களான பாலாஜி, அசோக் அவர்களும் பங்கேற்றனர். தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வினை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களான முனைவர் மா. ஜெகன், இரா. ராமமூர்த்தி,
இரா .சரவணன் மற்றும்
கே. ராமமூர்த்தி ஆகியோர் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.