தமிழ்நாடு அரசே தெரு நாய்களால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் விவசாயிகள் துயர் துடைக்க இறந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்குக தெரு நாய்களை கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகம் மூலம் உறுதியான, விரைவான நடவடிக்கை எடு விவசாய தோட்டத்தில் நடைபெறும் மனித கொலை கொள்ளை குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடு எனக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்டம் தழுவிய ஆர்ப்பாட்டம்

நமது திருப்பூர் மாவட்டத்திலும், அருகாமையில் இருக்கிற மாவட்டங்களிலும் கடந்த சில மாதங்களாக தெரு நாய்கள், வெறி நாய்களாக மாறி கால்நடைகளை அடைத்து வைத்திருக்கும் இடத்திற்கே வந்தும் மற்றும் விவசாய நிலத்தில் மேய்ச்சலில் இருக்கும் ஆடுகளை கடித்து கொன்று வருகிறது. ஆடுகளை மட்டும் அல்ல, எருமை மற்றும் பசு மாடுகளின் கன்று குட்டிகளையும் கடித்துக் கொன்று வருகிறது. வளர்ப்பு கோழிகளையும் துவம்சம் செய்து வருகிறது.

இதனால் சமீப காலத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகள் கன்று குட்டிகள் நமது மாவட்டத்தில் உயிரிழந்திருக்கின்றன இவை லட்சக்கணக்கான ரூபாய் விலை மதிப்புள்ளவை. தெரு நாய்கள் ஒவ்வொரு வட்டாரத்திலும் 100-க் கணக்காக பெருகி நகரத்திலிருந்து கிராமங்களுக்குள் நுழைந்து இந்த அழிச்சாட்டிய செயலை செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து செய்வதறியாத திகைத்து வருகிறார்கள்.

விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு முக்கிய துணை தொழிலாக இருந்து வரும் நிலையில், இந்த தொழிலை வருங்காலத்தில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டிய உள்ளாட்சி நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்காமல், தெருவோரம் வீசி எறியப்படும் இறைச்சி கழிவுகளை தின்று பழக்கப்பட்ட தெருநாய்கள் அந்த உணவு கிடைக்காத போது, வெறி நாய்களாக மாறிவிடுகிறது.

அப்படிப்பட்ட இந்த நாய்களை கட்டுப்படுத்துவதற்கு அதற்கு குடும்ப கட்டுப்பாடு (ABC) செய்து தெருநாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவது என்பதை உரிய முறையில் உள்ளாட்சி நிர்வாகங்கள் செய்யவில்லை. இதனால் தெருநாய்கள் பல்கி பெருகிப் போய் உள்ளது. சமீபத்தில் தெருநாய்களை கால்நடைகள் கொல்லப்பட்ட நிகழ்வுகளில் விவசாயிகள் தன்னெழுச்சியாக போராடி மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்திய அடிப்படையில் விரைவில் இறந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு அரசுக்கு பரிந்துரை அனுப்பி பெற்று தரப்படும் என்றும், தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த அனைத்து வட்டாரங்களிலும் உரிய கட்டமைப்பை உருவாக்கப்படும் என்றும், நாய்களை பிடித்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தலைவர் உறுதி அளித்தார்கள், உறுதியளித்தபடி எந்த பணிகளும் இதுவரை நடைபெறவில்லை. இழப்பீடு வழங்குவதற்கான அறிவிப்பு எதுவும் செய்யப்படவில்லை.

ஆகவே,தமிழ்நாடு அரசு மேலும் தாமதப்படுத்தாமல் உயிரிழந்துள்ள கால்நடைகள் ஆடு, கோழி, கன்று குட்டிகள் ஆகியவற்றுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், தெரு நாய்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலமாக எடுக்க வேண்டும் எனவும் விவசாய தோட்டத்தில் நடைபெறும் மனித கொலை கொள்ளை குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்* எனவும் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு

மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் பொன்.வேலுச்சாமி வரவேற்பு உரையாற்றினார்.

A.தேவராஜ், N.K.குப்புசாமி C.ராதாமணி, காங்கேயம்,
N.குப்புசாமி மூலனூர், S.காரல்மார்க்ஸ், வடசின்னேரிபாளையம்
K.பாலசுப்பிரமணியம், கிருஷ்ணமூர்த்தி கண்டியன்கோவில்
A.லெனின் குண்டடம்,S.P.சுப்பிரமணி சிறுக்களஞ்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோரிக்கையை விளக்கி மாநில துணைச்செயலாளர் நாமக்கல் பி.பெருமாள், மாவட்ட செயலாளர் ஆர்.குமார், மாவட்ட பொருளாளர் ஏ.பாலதண்டபாணி, தமிழ்நாடு கரும்பு விவசாய சங்கம் அமராவதி கூட்டுறவு சங்க ஆலை செயலாளர்M.M.வீரப்பன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் S.K.கொளந்தசாமி, தமிழ்நாடு சென்னை விவசாயிகள் சங்கமாவட்ட தலைவர் S.பரமசிவம் ஆகியோர் உரையாற்றினார்கள்.

போராட்டத்தை வாழ்த்தி பிஏபி வெள்ளகோவில் கிளை வாய்க்கால் நீர் பாதுகாப்பு சங்க தலைவர் பி.வேலுச்சாமி, வெள்ளகோவில் செ.வேலுச்சாமி, காங்கயம் பி.முத்துராஜ், ஊத்துக்குளி பி.டி.சுரேஷ், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர் கே.சரஸ்வதி ஆகியோர் உரையாற்றினார்கள்

அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் R.வெங்கட்ராமன்,உடுமலை ஒன்றிய தலைவர் A.ராஜகோபால், திருப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர்
S.அப்புசாமி, கட்டிட தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் எம்.கணேசன் உட்பட திரளான விவசாயிகளும், பெண் விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
இறுதியாக காங்கேயம் இரா.செல்வராஜ் நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *