புதுச்சேரி ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் பாட்கோ கழகம் மூலம் ரூபாய் 1 கோடியே 96 லட்சம் மதிப்பீட்டில் காரைக்கால் மாவட்டம் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட எம்ஜிஆர் நகர் பறவைபேட் பகுதியில் புதிதாக வடிகால் வசதியுடன் கூடிய தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.

மேலும் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் PRN திருமுருகன் மற்றும் புதுச்சேரி ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சாய் ஜே சரவணகுமார் மற்றும் ஆகியோர் இப்பூமி பூஜையில் கலந்து கொண்டு சாலை பணிக்கான அடிகள் நாட்டி தொடங்கி வைத்தனர்.
பின்னர் புதுச்சேரி ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சாய் ஜே சரவணகுமார் செய்தியாளர்களை சந்தித்தபோது. காரைக்கால் மாவட்டத்தில் ஆதிராவிட நலத்துறை மூலம் 20 பணிகளுக்காக ரூபாய் 6 கோடியே 50 லட்சம் செலவிடப்பட்டு அப்பணிகள் நிறைவடைந்துள்ளது.
தற்போது ரூபாய் 7 கோடி அளவில் 20 பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இன்னும் புதிதாக 7 பணிகள் காரைக்கால் மாவட்டத்தில் தொடங்கப்பட இருக்கின்றன என தெரிவித்தார். மேலும் காரைக்கால் மாவட்டத்தில் மூன்றரை ஆண்டுகளில் ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் திட்டங்களுக்காக செலவிடப்பட்டிருக்கின்றன.
மேலும் 30 கோடி அளவில் காரைக்கால் மாவட்டத்தில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு 80 சதவீதம் ஆதிதிராவிடர் மக்களுக்கும் மீதமுள்ள 20 சதவீதம் ஏழை மக்களுக்கு வழங்கப்பட உள்ளது என்று புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சாய் ஜே சரவணகுமார் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி பாட்கோ செயற்பொறியாளர் பக்தவச்சலம்,காரைக்கால் ஆதி திராவிடர் நலத்துறை உதவி இயக்குநர் (பொறுப்பு) திரு. பொய்யாத மூர்த்தி மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.