புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் IAS அறிவுறுத்தலின்படி நாளை 25.01.2025 தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் காரைக்கால் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அதிகாரி அலுவலகத்திலும் தேசிய வாக்காளர் தினத்திற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.

அதேபோல் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை மாவட்ட தேர்தல் அதிகாரி G. செந்தில்நாதன் தலைமையில் அங்கு பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் வாக்காளர் உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் செயலர் பொன் பாஸ்கரன், தேர்தல் துறை கண்காணிப்பாளர் பாலு பக்கிரிசாமி, மாவட்ட ஆட்சியர் அலுவலக கண்காணிப்பாளர் வித்யாதரன், வட்டாட்சியர்கள் சுரேஷ் மற்றும் ஷீலா, மற்றும் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.