கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள கோனாங்குப்பம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற புனித பெரியநாயகி மாதா திருத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் வெகு விமர்சையாக தேர் திருவிழா நடைபெறும் அதேபோல் இந்த ஆண்டு 305 ம் ஆண்டு பெருவிழா கடந்த 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது

இதைத் தொடர்ந்து தினமும் கூட்டுத் திருப்பலி சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வந்தது . நேற்று பத்தாம் நாள் திருவிழாவாக தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக முகாசப்பரூர்  பாளையக்காரரை  அவரது இல்லத்தில் இருந்து தேவாலய பங்கு தங்கைகள் மரியாதை செய்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு தேரை அவர் துவங்கி வைத்தார் இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

இக்கோவில் குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை இந்த தேர் திருவிழாவில் விருத்தாச்சலம் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா பாண்டிச்சேரி  உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் வேளாங்கண்ணி நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களில் இருந்தும்  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் பவனியை கண்டு களித்தனர் . காவல் துறையினர் நூற்று க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்தனர்.சென்னை விழுப்புரம் விருத்தாச்சலம் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *