செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கீழ்குவளைவேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம் முன்னிட்டு ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் ‘பெண் குழந்தைகளை காப்போம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு உரையரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு ரயில்வே சு.தனசேகரன் தலைமை தாங்கினார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன், எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை தேவகி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, வட்டார வள மைய மேற்பார்வையாளர் செந்தில் முருகன் பங்கேற்று, தேசிய பெண் குழந்தைகள் தினம் பற்றிய விழிப்புணர்வு தகவல்களை வழங்கினார். மேலும் பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற பெண் குழந்தைகளுக்கு கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சி.ம.புதூர் கிளை நூலகர் ஜா.தமீம் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக பெண் குழந்தைகள் காப்போம் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இறுதியில் பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.