மதுரை சிம்மக்கல் வைகை தென்கரையில் புதிய பாலம் கட்டும் பணிக்காக 39வீடுகள் இடிப்பு! பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடவடிக்கை!!
மதுரை வைகை தென்க ரையில் புதிய பாலம் கட் டும் பணிக்காக 39 வீடுகள் இன்று இரண்டாவது நாளாகபலத்த போலீஸ் பாது காப்புடன் இடிக்கப்பட்டது.
மதுரை தமுக்கம் மைதானம் முதல் கோரிப்பாளையம் தேவர் சிலையை கடந்து வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஏ.வி. மேம்பாலத்துக்கு இணையாக புதியதாக ரூ.190 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்றுவருகிறது. இந்த பாலம் கட்டுவதற்கு வசதியாக வைகை ஆற்றின் தென்கரையிலும், நெல்பேட்டை அண்ணா சிலை பகுதியில் 39 வீடுகளை இடிப்பதற்கு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப் பட்டிருந்தது.
அதன்படி, அந்த வீடு களை புல்டோசர் மூலம் இடிக்கும் பணி நெடுஞ்சாலைத்துறை சார்பில்நேற்று துவங்கி இன்று இரண்டாவது நாளாக நடைபெற் றது. இதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.