எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழியில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விலை நிலங்களை மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா பார்வையிட்டு விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார் பயிர் காப்பீடு மூலம் பெரும் ஊழல் நடப்பதாக குற்றச்சாட்டு :-
பருவம் தவறி பெய்த மழையால் டெல்டா மாவட்டங்களில் பரவலாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து மழை நீரில் முளைக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிற்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சுதா சீர்காழி அடுத்த தருமகுளம், திருவெண்காடு, நெய்தவாசல், சின்னப் பெருந்தோட்டம், அல்லிமேடு, மணி கிராமம் உள்ளிட்ட பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் அவர்களின் குறைகளை கேட்டு அறிந்தார் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தருவதாக தெரிவித்தார்.
பின் செய்தியாளர்களை சந்தித்த மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சுதா பேசுகையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையில் சாய்ந்து முளைக்கத் தொடங்கி உள்ளதால் விவசாயிகள் பெறும் நஷ்டத்தை கண்டுள்ளனர் அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகள் கட்டும் பணத்திற்கு மழையால் பாதித்த போது உரிய இழப்பீடு வழங்க மறுக்கிறது எனவும் ,பயிர் காப்பீடு திட்டத்தில்பெரும் அளவு ஊழல் இருப்பதாகவும் இதனை ராகுல் காந்தி மூலம் பாராளுமன்றத்தில் ஊழலை வெளிக்கொண்டு வருவோம் எனவும்தெரிவித்தார்.மேலும் விவசாயிகளை பாதிக்கும் விதமாக ஒன்றிய அரசு மாநில அரசுக்கு நிதி வழங்கவில்லை எனவும் தெரிவித்தார்.
இந்த ஆய்வில் சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் கமல் ஜோதி தேவேந்திரன் கிழக்கு ஒன்றிய செயலாளர் பஞ்சுகுமார் மற்றும் விவசாயிகள் வேளாண் துறை அதிகாரிகள் பொதுமக்கள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.