வலங்கைமான் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சதுரங்க விளையாட்டுப் போட்டி நடைபெற்றது, வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு, பரிசுகள் வழங்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் மாநில அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையான 2024- 2025 ஆம் ஆண்டிற்கான (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) உள்விளையாட்டு அரங்கப் போட்டிகளான கேரம் மற்றும் சதுரங்கம் விளையாட்டுப் போட்டிகளை வலங்கைமான் அரசினர் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி நடத்தியது, இந்நிகழ்வானது 500க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் கல்லூரிகளை 11 மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திலும் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாநில அளவிலான கேரம் மற்றும் சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றது.
முன்னதாக கல்லூரி முதல்வரின் நேர்முக உதவியாளர் வேல்முருகன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கல்லூரி முதல்வர் ஜான் லூயிஸ் தலைமை உரையாற்றினார். மேலும் இவ்விழாவில் மனித வள தலைமை அலுவலர் கணேசன் துவக்க உரை ஆற்றினார். நிறைவில் மின்னியல் மற்றும் மின்னணு தொடர்பியல் துறை தலைவர் முனைவர் சுசீலா அனைவருக்கும் நன்றி கூறினார். மாநில அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளின் கேரம் மற்றும் சதுரங்கம் விளையாட்டுப் போட்டி துறையின் மாணவிகள் பங்கேற்றனர்.
கேரம் போட்டியில் சேலம் மண்டலம் – தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி முதல் இடத்தையும், கோயம்புத்தூர் மண்டலம்- மகளிர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி இரண்டாம் இடத்தையும், திருச்சி மண்டலம் எஸ் ஐ டி பாலிடெக்னிக் கல்லூரி மூன்றாம் இடத்தையும், திருநெல்வேலி மண்டலம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி நாலாம் இடத்தில் வெற்றி பெற்றனர்.
அதேபோன்று சதுரங்க போட்டிகளில் கோயமுத்தூர் மண்டலம் பிஎஸ் ஜி பாலிடெக்னிக் கல்லூரி முதல் இடத்தையும், சேலம் மண்டலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி இரண்டாம் இடத்தையும், காஞ்சிபுரம் மண்டலம் பிஎஸ் ஜி பாலிடெக்னிக் கல்லூரி மூன்றாம் இடத்தையும், சென்னை மண்டலம் டாக்டர் தர்மாம்பாள் பெண்கள் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி நான்காம் இடத்தையும் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவில், வலங்கைமான் காவல்துறை உதவி ஆய்வாளர் பொன்னியின் செல்வன் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் உடன் கல்வி இயக்குனர் முனைவர் அகஸ்டின் ஞானராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியில் விளையாட்டுப் போட்டியின் குழுவினர்கள் சிறப்பாக செய்திருந்தார்கள்.