ஏ பி பிரபாகரன். பெரம்பலூர். செய்தியாளர்.
சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணியை பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் எஸ் பி ஆதர்ஷ் பச்சேரா தொடங்கி வைத்தனர்.

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம், சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பெரம்பலூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறை இணைந்து 36வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு பெரம்பலூர் பாலக்கரையில் இருந்து சங்குபேட்டை, பழைய பேருந்து நிலையம் வழியாக தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிகுலேஷன் பள்ளி வரை சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் மற்றும் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
பெரம்பலூர் டிஎஸ்பி ஆரோக்கியராஜ், தேசிய நெடுஞ்சாலை காவல் ஆய்வாளர் திரு. கிள்ளிவளவன், பெரம்பலூர் மாவட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. மகேஷ் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள் பொதுமக்களிடம், “யாராவது போக்குவரத்து விதிகளை மிகவும் கவனமாகப் பின்பற்றாததால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் இறக்கின்றனர். சிலர் போக்குவரத்து விதிகளை நேரத்தை வீணடிப்பதாக நினைக்கிறார்கள், அவர்கள் சாலை விதிகளை பின்பற்றுவதில்லை. இருப்பினும், பல நேரங்களில், இந்த போக்குவரத்து விதிகள் மட்டுமே மக்களை ஒரு துயர விபத்தில் இருந்து தடுக்கின்றன.
போக்குவரத்து விதிகள் எவ்வாறு முக்கியம், அவை ஏன் பின்பற்றப்பட வேண்டும், பல்வேறு வாகனங்களுக்கான பல்வேறு போக்குவரத்து விதிகள் மற்றும் போக்குவரத்து விதிகள் எவ்வாறு மனித உயிர்களைப் பாதுகாக்கின்றன என்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை மாணவர்கள் ஏற்படுத்தினர்.
“தலைக்கவசம் என்பது உயிர் பாதுகாப்பு”, “சீட் பெல்ட் அணிய வேண்டும்”, “குடித்துவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம்”, “வேகம் விவேகம் அல்ல”, “செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்ட வேண்டாம்” போன்ற போக்குவரத்து விதிகள் அடங்கிய பதாகைகளையும் அவர்கள் ஏந்திச் சென்றனர். இந்த நிகழ்வில் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் வெற்றிவேலன் மற்றும் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.