ஏபி பிரபாகரன். பெரம்பலூர். செய்தியாளர்.
திமுக தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
பெரம்பலூர். பெரிய வெண்மணி ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய வெண்மணி,சின்ன வெண்மணி,கொத்தவாசல்,புதுக்குடிசை ஆகிய ஊர்களுக்கு தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம், பெரிய வெண்மணியில் நடைபெற்றது..
பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் ஜெகதீசன் அவர்களின் அறிவுறுத்தல் படி,வேப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மருவத்தூர் ராஜேந்திரன் தலைமையில் மற்றும் குன்னம் தொகுதி பொறுப்பாளர் அருண் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,
மாவட்ட பிரதிநிதி கரம்பியம்.கதிரவன் , மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் அசூர் முத்து செல்வன்,வர்த்தக அணி துணை அமைப்பாளர் வரகூர் . கொளஞ்சி,ஒன்றிய வர்த்தக அணி துணை அமைப்பாளர் .அன்பரசு , ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி சமூக வலைத்தள பொறுப்பாளர் வரகூர்.சிதம்பரராசன், கிளை கழக செயலாளர்கள், கழக தோழர்கள் என் பலரும் கலந்து கொண்டனர்.