ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் குடியரசு தின விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் குடியரசு தின விழா கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன் தலைமையிலும், நடிகர் அப்பா பாலாஜி, நடிகர் மீசை தங்கராஜ், ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, எழுத்தாளர் விவேக் ராஜ், இன்ஜினியர் சண்முகம், மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா, மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான பிரியா, சமூக சேவகி தேவி பிரியா ஆகியோர் முன்னிலையிலும், திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தேசிய கொடி ஏற்றினார்.
உடன் திருநாவுக்கரசு, மலையாண்டி, வைத்திலிங்கம், ராம ஜெயந்தி, புனிதா, சுலக்சனா, குழந்தை நட்சத்திரம் லியானா மற்றும் நடிகர்கள், நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டார்கள். அனைவருக்கும் இனிப்புகள், சாப்பாடு வழங்கப்பட்டது. ஏழை, எளியவர்களுக்கு உணவு, வீட்டிற்கு தேவையான பொருட்கள் 105 பேர்களுக்கு வழங்கப்பட்டது