ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் 76 வது குடியரசு தின விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் விஷ்ணு சங்கர் வரவேற்புரை ஆற்றினார்.
கல்லூரி (பொறுப்பு) முதல்வர் ராமகிருஷ்ணன் தலைமையுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக ராஜபாளையம் அரிமா சங்கத் தலைவர் சூரியநாராயணன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி, தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று சிறப்புரை ஆற்றினார்.
அவர் தனது சிறப்புரையில் இன்னுயிரைத் துறந்து உயிர் நீத்த விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு மரியாதை செய்து குடியரசு நாளை போற்றுகின்றோம். மாணவர் சமுதாயம் மது, போதை ஆகியவற்றிற்கு அடிமையாகாமல் வாழ்க்கையில் முன்னேற்றம் பெற வேண்டும். தங்களது உடல் நலனை மனதில் கொண்டு சாலை போக்குவரத்து போன்ற முக்கிய இடங்களில் கவனமாகச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். குடியரசு தின விழாவை முன்னிட்டு உடல் தகுதியை பேணிக் காக்க விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.
ஆண்கள் பிரிவில் முதல் மூன்று இடங்களை மாணவர்கள் சுஜித் கண்ணன், நவீன் மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
பெண்கள் பிரிவில் முதல் மூன்று இடத்தை மாணவிகள் பாப்பாத்தி, ராக்கம்மாள் மற்றும் மற்றும் சக்தி ஆகியோர் பரிசுகளை வென்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழும், பரிசுக்கோப்பையும், பதக்கமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மாராத்தான் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் முத்துக்குமார் மற்றும் அபிநயா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். நிறைவாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திருமதி சத்யா நன்றியுரையாற்றினார்.
இந்நிகழ்வில் ராஜபாளையம் அரிமா சங்க நிர்வாகிகள், பேராசிரியர்கள், தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர்கள், அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் வணக்கம் இன்றைய சிறப்பு விருந்தினராக வேதியல் துறையைச் சேர்ந்த அறிவியல் விஞ்ஞானி கனகசபாபதி அவர்கள் கலந்து கொண்டார்.