தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், டான்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் அங்கமான தொடக்கப் பள்ளியின் 42-வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக பள்ளியின் முன்னாள் மாணவர்கள், மூளை நரம்பியில் நிபுணர் மருத்துவர் சோமேஸ் வாஞ்சிலிங்கம், SRK ஸ்கேன் மையத்தின் நிர்வாக இயக்குநருமான மருத்துவர் ரஞ்சித்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தார்கள்.
மாணவ, மாணவிகளின் வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவர்களின் பெற்றோர்கள் ஆர்வத்தோடு கலந்துகொண்டு தங்கள் குழந்தைகளை உற்சாகப்படுத்தினார்கள்.
முன்னதாக பள்ளியின் தாளாளர் சுரேஸ் பெலிக்ஸ் வரவேற்புரை வழங்கினார். முதல்வர் ஆல்பர்ட் லூர்துசாமி ஆண்டறிக்கை வாசித்தார். துவக்கப்பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஜெயசாந்தி நன்றியுரை வழங்கினார்.