தஞ்சாவூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.ஜெயினுல் ஆபிதீன் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜத்திடம் அளித்துள்ளார். மனுவில் கூறியிருப்பதாவது, எங்கள் கட்சியின் மாநில துணைத்தலைவரும், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும்,
தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான நவாஸ்கனியை
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளராக உள்ள வேலூர் இப்ராஹிம் என்ற செய்யது இப்ராஹிம் என்பவர் கடந்த 24.01.2025 அன்று சமூக வலைதள
பக்கத்தில் மிகவும் கீழ்த்தரமான சொற்களால் அவதூறாக பேசியும். மிரட்டல் விடுத்தும் இரண்டு மதங்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்தும் வகையிலும் பேசியுள்ளார்.

கடந்த 2019 முதல் 6 ஆண்டுகளாக இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினராக பொதுக்கள் அனைவருக்கும் எவ்வித பாகுபாடும் இன்றி பணியாற்றி வரும் அவருடைய பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் சமூக நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையிலும் பேசி அவர் அளித்துள்ளார்.

எம்.பி.நவாஸ்கனி மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் அனைத்து தரப்பட்ட மக்களுக்காகவும் தொடர்ந்து பாடுபட்டு வரும் எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் மீது இது போன்ற இழிச் சொற்களால் பேசி சமூக அமைதியை கெடுத்து இரு பிரிவினருக்கு இடையே வெறுப்பை விதைத்து கலவரத்தை தூண்டும் வண்ணம் பேசி மதுரையில் காவல்துறையினரின் முன்னிலையில் எங்களது நாடாளுமன்ற உறுப்பினரின் புகைப்படத்தை செருப்பால் அடிக்க முயன்று. அதனை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, வன்முறையை தூண்டும் நோக்கத்தோடு பதிவிட்டுள்ளார்.

சட்ட ஒழுங்கை பாதிக்கும் எண்ணத்தோடு வன்மத்தோடு பேசி, சமூக அமைதியை கெடுக்கும் வண்ணம் செயல்களில் ஈடுபட்டு வரும் வேலூர் செய்யது இப்ராஹிம் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பொது அமைதியை சீர்குலைக்கும் நபர் தஞ்சை மாவட்டத்தில் நுழைய தடை விதிக்க வேண்டுமென
வும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக கேட்டுக்கொள்கிறே
ன் என அதில் குறிப்பிடப்பட்டுள்
ளது.

    தஞ்சாவூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.ஜெயினுல் ஆபிதீன் மனு அளித்த போது, மாவட்ட பொறுப்பாளர் அடிசாலி, ஊடக பிரிவு செயலாளர் முகம்மது இக்பால், சேக் அப்துல்லா, நகர செயலாளர் ஜோசப் சகாயராஜ், தொழிலாளர் பிரிவு மாவட்ட பொறுப்பாளர் சுப்பராயன் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *