எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே பூம்புகார் காவிரி சங்கமத்தில் தை அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்பணம் செய்து புனித நீராடி வழிபாடு.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்புகாரில் காவிரி ஆறு கடலுடன் கலக்கும் காவிரி சங்கமத்தில் தை அமாவாசை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகளை செய்து வழிபட்டு வருகின்றனர்.தை அமாவாசை தினத்தில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் குடும்ப கஷ்டங்கள் நீங்கி, முன்னோர்களின் அருளாசி கிடைக்கும் என்பதால் காவிரி சங்கமத்தில் அதிகாலை முதலே காய்கறிகள்,கீரைவகைகள்,பச்சரிசி,எள் வைத்து பூஜை செய்து தர்ப்பணம் கொடுத்து காவிரி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.ஆடி, புரட்டாசி மற்றும் தை அமாவாசை நாட்களில் இந்த காவிரி சங்கமத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராடி சென்று வருகின்றனர்.பொதுமக்கள் வசதிக்காக சீர்காழி, மயிலாடுதுறை பகுதியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.